HomeVideoDiabetes Diet in Tamil

Diabetes Diet in Tamil



நீரிழிவு நோய் உணவு முறை

நீரிழிவு நோய்
முற்றிலும் குணப்படுத்த முடியாது கட்டுப்பபாட்டில் தான் வைக்கலாம்

நீரிழிவு நோய் கட்டுப்பபாட்டிற்கு முக்கிய தேவை
மருந்துகள்
உணவு கட்டுப்பாடு

நீரிழிவு என்பது
கணையம் இன்சுலீனை சுரக்க இயலாமல் சர்க்கரை (க்ளூகோஸ்) சக்தி உடலில் சேராமல் ரத்தத்தில் தங்கிவிடுவது தான்

நீரிழிவு உணவு கட்டுப்பாடு

மாவுச் சத்து உணவுகளை குறைப்பதும் நல்லது அதிகமாக உட்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்

இரு வகை மாவுச் சத்துகள்

1. மாவுச் சத்து உள்ளவை- ரொட்டி, தானியங்கள், அரிசி, காய்கறிகள்

2. சர்க்கரைச் சத்து உள்ளவை- பழங்கள், பழரசங்கள், பால், தேன்

உப்பை குறைப்பது நல்லது

பருப்பு, காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் பருப்பு கெட்டியாக இருக்கக் கூடாது

நெய், வெண்ணை, வனஸ்பதி வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

பால், ஆடை நீக்கியதாக இருக்க வேண்டும்வீட்டிலேயே தயாரித்த தயிர், பனீர், சோயா பனீர், சேர்த்துக் கொள்ளலாம்

ஒரு போதும், விரதம் கூடாது நேரம் தவறாமல் சாப்பிடுவது அவசியம்

சாப்பிடாத வேளை உணவை, அடுத்த வேளை சேர்த்து சாப்பிடக் கூடாது.

எந்த விதமான கஞ்சி, கூழ், களியும் சேர்த்துக் கொள்ளக் கூடாது

வறுத்த காய்கறி உணவுகளை விட கூட்டு, அவியல் சாப்பிடுவது நல்லது

கிழங்கு வகைகளை (முள்ளங்கி தவிர) அதிகமாக சாப்பிட வேண்டாம், இவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்

அரிசி, மைதாவை விட கேழ்வரகு பயன்படுத்தலாம்

மூன்று வேளை உணவை ஆறு வேளையாக உண்ண வேண்டியவை

தவிர்க்க வேண்டியவை

சர்க்கரை இனிப்புகள், தேன், வெல்லம், ஜாம், தேங்காய் சட்னி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய், டால்டா, ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, பூஸ்ட், கோகோ கோலா, பெப்ஸி, லிம்கா, மால்ட்டோவா, ஃபேண்டா, டின், புட்டிகளில் விற்கும் பழச்சாறுகள் வேர்க்கடலை, பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, உலர்ந்த பழங்கள், கேக், ஈரல், மூளை, ஆட்டுக்கால், மாம்பழம், அன்னாசிப்பழம், சப்போட்டா, சீதாப்பழம், பலாப்பழம், திராட்சை

நிறைய சேர்க்க வேண்டிய காய்கறிகள்:
வாழைத்தண்டு, முள்ளங்கி, முட்டைகோஸ், வெண்டை, பீர்க்கை, வெள்ளைப்பூசணி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், காராமணி, கொத்தவரை, அவரை, பீன்ஸ், வெங்காயம், முருங்கை, நூல்கோல், வெள்ளரிக்காய், தக்காளி, கத்தரிக்காய், காலிஃபிளவர், பரங்கி, குடைமிளகாய், கோவைக்காய், டர்னிப், சௌசௌ ஆகியவை

சேர்க்க வேண்டிய கீரை வகைகள்:
முருங்கை, மணத்தக்காளி, பசலை, கொத்தமல்லி, புதினா, சிறுகீரை, பருப்பு கீரை, அகத்தி கீரை, முளைக்கீரை, புளிச்சகீரை

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும்
சேர்க்கக் கூடிய பழ வகைகள் ஏதாவது ஒன்று மட்டும்: 1/2 ஆப்பிள், 1 சாத்துக்குடி, 1/2 பச்சை வாழைப்பழம் 1 தக்காளி சிறியது, 1 கொய்யாப்பழம் சிறியது, 1 லைவாழைப்பழம், 1 ஆரஞ்ச்

தாராளமாக சேர்த்துக் கொள்ளக் கூடியவைகள்: வெள்ளரி, எலுமிச்சம்பழம், மோர், வெஜிடேபிள் சூப், குறைவாக உப்பிட்ட ஊறுகாய் (எண்ணெய் இல்லாமல்)

இவ்வுணவுக் கட்டுப்பாட்டு முறையை உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பின்பற்றுவது அவசியம்

source

Previous post
Postgraduate Diabetes Education
Next post
CHANGING A DEXCOM G5 SENSOR

Leave a Reply

Be the First to Comment!

Notify of
avatar
wpDiscuz